search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்ஸ், பவுண்டரிகள் மூலமாகவே 42 ரன்கள்: 10 வருட ஐ.பி.எல். சாதனையை முறியடித்த சுனில் நரைன்
    X

    சிக்ஸ், பவுண்டரிகள் மூலமாகவே 42 ரன்கள்: 10 வருட ஐ.பி.எல். சாதனையை முறியடித்த சுனில் நரைன்

    சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் மூலமாகவே 42 ரன்கள் குவித்து 10 வருட ஐ.பி.எல். சாதனையை முறியடித்துள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் சுனில் நரைன். 6 பந்துகளையும் வித்தியாசமாக வீசும் திறமை படைத்த இவரது பந்தை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறுவார்கள்.

    பந்து வீச்சில் ஜாம்பவனாக விளங்கும் இவருக்குள் பேட்டிங் திறமையும் உள்ளது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் வெளிப்பட்டு வருகிறது. மூன்று போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரைன், இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்று குஜராத் அணிக்கெதிராக தொடக்க வீரராக களம் இறங்கிய சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். பால்க்னெர் வீசிய அடுத்த ஓவரில் நான்கு பவுண்டரிகள் பறக்க விட்டார்.

    பாசில் தம்பி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். ரெய்னா வீசிய அடுத்த ஓவரில் அவுட் ஆனார். 15 நிமிடங்கள் களத்தில் நின்ற அவர், 17 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் மூலம் 42 ரன்கள் குவித்தார். இந்த 42 ரன்களும் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் மூலம் வந்தது.

    ஐ.பி.எல். தொடக்க சீசன் 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சனத் ஜெயசூர்யா சிக்ஸ் மற்றும் பவுண்டரிகள் மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக 36 ரன்கள் சேர்த்திருந்தார். இதுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது 10 வருடம் கழித்து இந்த சாதனையை சுனில் நரைன் முறியடித்துள்ளார்.
    Next Story
    ×