search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்
    X

    கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்

    டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள கிறிஸ் கெய்லை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட்டின் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். குஜராத் அணிக்கெதிரான போட்டியில் 33 பந்தில் 77 ரன்கள் குவித்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டினார்.

    டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். இவரது சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கவுதம் காம்பீரும் கிறிஸ் கெய்லை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    கிறிஸ் கெய்ல் சாதனைக் குறித்து கவுதம் காம்பீர் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் மார்க்கெட்டிங் நபர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் எங்களை போன்றோர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டியில் கெய்ல் 10 ஆயிரம் ரன்களைத் தொட்டது குறித்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடையமாட்டார்கள்.

    ரன்குவிப்பதற்கான பார்முலாவாக 4-3-2-1 என்பதைத்தான் என்னிடம் ஏராளமான பயிற்சியாளர் சொல்வார்கள். நாம் முதலில் நான்கு ரன்கள், அதன்பின் 3, 2, 1 என தேர்வு செய்வேன். கெய்லோடு இந்த பார்முலாவை பார்த்தால், அவர் 6-6-6 என்றுதான் நினைப்பார். அவர் ஒன்று, இரண்டு, மூன்று ரன்களை வெறுப்பார். ஏராளமானவர்கள் அவருடைய பேட்டின் தடிமன் குறித்து பேசுகிறார்கள். ஆனால், எனக்கு அவருடைய போட்டிக்கான திட்டமிடலை நம்புகிறேன்.

    என்னால் பப்பில் அவருக்கு 1 மணிக்குமேல் கம்பெனி கொடுக்க இயலாது. ஆனால், அவர் பேட்டிங் செய்தால், விடியற்காலை 2 மணியாக இருந்தாலும், டி.வி.யை ஆன்செய்வதில் முதல் நபராக நான்தான் இருப்பேன்’’ என்றார்.
    Next Story
    ×