search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன்: ஜாகீர்கான்
    X

    கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன்: ஜாகீர்கான்

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன் என்று டெல்லி கேப்டன் ஜாகீர்கான் தெரிவித்தார்.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

    ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் சன்ரைசஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. வில்லியம்சன் 51 பந்தில் 89 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), தவான் 50 பந்தில் 70 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் 15 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 33 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கருண் நாயர் 23 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும், கவுல், யுவராஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் சன்ரைசஸ் ஐதராபாத் 2-வது இடத்துக்கு முன்னேறியது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-



    எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் அபாராமாக இருந்தது. வில்லியம்சன் முதல் ஆட்டத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். அவரும், தவானும் இணைந்து அணி நல்ல ஸ்கோர் அமைய காரணமாக திகழ்ந்தனர்.

    எங்களது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். புவனேஸ்வர் குமார் மீண்டும் ஒருமுறை தனது பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஜாகீர்கான் கூறியதாவது:-



    180 ரன் என்பது எடுக்கக் கூடிய இலக்கு. 192 ரன் என்பது கடினமானதே. நான் வீசிய கடைசி ஓவரில் ரன்களை வாரி கொடுத்து விட்டேன்.

    ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் இலக்கை நோக்கி சிறப்பாகவே ஆடினார்கள். துரதிருஷ்டவசமாக ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் போனது.

    புவனேஸ்குமார் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி ஐதராபாத் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார். கருண் நாயரின் ரன் அவுட் ஆட்டத்தை மாற்றி விட்டது. ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். குறைந்த அளவு ரன்னில்தான் தோற்றுள்ளோம்.

    இவ்வாறு ஜாகீர்கான் கூறியுள்ளார்.

    ஐதராபாத் அணி 7-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்டை 22-ந் தேதியும், டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை அதே தினத்திலும் சந்திக்க உள்ளன.
    Next Story
    ×