என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    ஐ.பி.எல்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

    ஐ.பி.எல். 10-வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 160 ரன்களை ஐதரபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். சீசன் 10-ன் 19 லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து தொடக்க வீரர்களாக வார்னர், தவான் களமிறங்கினர். இதில் அணியின் ஸ்கோர் 25 -ஆக இருக்கும் போது மோகித் ஷர்மா பந்துவீச்சில் தவான் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஹென்ட்ரிக்ஸ் 9 (16) ரன்னும், யுவராஜ் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேற ஐதராபாத் அணி தடுமாறியது.

    இதையடுத்து வார்னர் - நமன் ஓஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ரன் உயரத் தொடங்கியது. 20 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 34 ரன்கள் எடுத்திருந்த போது கரியப்பா பந்தில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.



    மறுபக்கம் உறுதியாக நின்று போராடிய கேப்டன் வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 70 ரன்களை குவித்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது.

    பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்கி விளையாடி வருகிறது. 
    Next Story
    ×