என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் - புனே இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீள்வது யார்?
    X

    பெங்களூர் - புனே இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீள்வது யார்?

    ஐ.பி.எல். தொடரில் இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும்.
    பெங்களூர்:

    10-வது ஐ.பி.எல். போட்டியின் 12-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் மோதுகின்றன.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேயிடம் (7 விக்கெட்) தோற்றது. அதைத் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர்) வென்றது. குஜராத் லயன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

    குஜராத் லயன்ஸ் முதல் 2 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளிடம் தோற்றது. 3-வது போட்டியில் புனேயை எளிதாக வென்றது. மும்பையின் ஆதிக்கத்தை தகர்த்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் குஜராத் உள்ளது.

    கடந்த ஆண்டு அந்த அணியுடன் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று இருந்ததால் குஜராத் லயன்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது.



    பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும்.

    பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், மும்பையிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி உள்ளது.

    புனே அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (பஞ்சாப், டெல்லி, குஜராத்) தோற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க புனே அணி கடுமையாக போராட வேண்டும்.

    இரு அணிகளும் மோதி இருந்த 2 ஆட்டங்களில் பெங்களூர் அணியே வெற்றி பெற்று இருந்தது.
    Next Story
    ×