என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.: ஐதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
    X

    ஐ.பி.எல்.: ஐதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

    கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உத்தப்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீ்ல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி உத்தப்பா (68), மணீஷ் பாண்டே (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

    பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் வார்னர், தவானால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

    தவான் 22 பந்தில் பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையிலும், வார்னர் 30 பந்தில் நான்கு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் ஐதராபாத் அணியால் அதிரடியாக ஆட முடியவில்லை. ஹென்றிக்ஸ் (13), யுவராஜ் சிங் (26), ஹூடா (13), கட்டிங் (15), நமன் ஓஜா (11) மற்றும் பிபுல் ஷர்மா (21) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் எடுக்க ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

    இதனால் கொல்கத்தா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    Next Story
    ×