என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டரில் டோனிக்கு எதிராக ஹேஸ்டேக் உருவாக்கியவர்களுக்கு சேவாக் கடும் கண்டனம்
    X

    டுவிட்டரில் டோனிக்கு எதிராக ஹேஸ்டேக் உருவாக்கியவர்களுக்கு சேவாக் கடும் கண்டனம்

    டுவிட்டரில் DhoniDropped என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டோனியை வசைபாடுபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய டோனிக்கு, இந்த ஐ.பி.எல். தொடரின் தொடக்கம் சரியாக அமையவில்லை. இதுவரை புனே அணி நான்கு போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நான்கு போட்டியிலும் டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நேற்றைய குஜராத் அணிக்கெதிரான போட்டியில் ஐந்து ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனால் சமூக வலைத்தளமான டுவிட்டரில் டோனிக்கு எதிராக #DhoniDropped என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரென்டில் இருந்தது. இதில் ஏராளமானோர் டோனிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். அதேவேளையில் டோனியின் ரசிகர்கள் #WeStandByDhoni ஹேஸ்டேக் உருவாக்கி ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

    டோனிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதற்கு சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் 6-வது வீரராக டோனி களமிறங்கி பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. இன்னும் 5-வது அல்லது 6-வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதில் டோனி மிகச் சிறந்தவர். விரைவில் டோனி தனது பாஃர்முக்கு வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐ.பி.எல். தொடரில் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. நான்கு அல்லது ஐந்து போட்டிகளை வைத்து டோனியின் தகுதியை எடைபோடக்கூடாது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தவர். இதனால் அவர் பாஃர்ம் இல்லாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு டோனி இல்லாமல் இந்திய அணி செல்லும் என்று உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஐ.பி.எல். தொடரில் இதுபோன்ற மோசமான நிலை ஏற்படும்.

    டோனியை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களின் தரத்தை பார்ப்பதற்கு ஐ.பி.எல். ஒரு பிளாட்பாரமாக இருக்கக்கூடாது. அதிக அளவு ரசிகர்களுக்கு மத்தியில் இளம் வீரர்களின் ஆட்டத்தை தரம்பார்ப்பதற்கு என்றால் சரியாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×