என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனேயை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி: மேக்குல்லம், சுமித்துக்கு ரெய்னா பாராட்டு
    X

    புனேயை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி: மேக்குல்லம், சுமித்துக்கு ரெய்னா பாராட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புனேயை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி பெற்றது. மேக்குல்லம், சுமித்துக்கு ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ராஜ்கோட்:

    ஐ.பி.எல் போட்டியில் நேற்று ராஜ்கோர்ட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் தனது முதல் வெற்றி பதிவு செய்தது.

    இந்த வெற்றி குறித்து குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா கூறியதாவது:-

    இரண்டு தோல்விக்கு பிறகு மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது கடினம். நாங்கள் மிகவும் பலமாக முன்னேறி பெற்ற இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைகிறோம். அறிமுக பவுலர் ஆண்ட்ரூ டை அபாரமாக பந்து வீசினார். குறிப்பாக அவர் கடைசி நேரத்தில் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்.

    எங்களது தொடக்க வீரர்கள் மேக்குல்லம், வெயின் சுமித் சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர்கள் எப்படி தொடக்க வரிசையில் சிறப்பாக செயல்பட்டார்களோ அது போல் செயல்பட்டனர்.

    இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறும் போது ஆடுகளத்தின் தன்மை மாறியதாக நான் கருதவில்லை. நாங்கள் நல்ல நிலையில் தான் இருந்தோம். விக்கெட்டுகள் சரிந்ததால் தான் ரன் குவிக்க முடியவில்லை. மேக்குல்லம்-சுமித்தின் அதிரடியால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது என்றார்.

    Next Story
    ×