என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையுடன் இன்று பெங்களூர் மோதல்: விராட் கோலி அசத்துவாரா?
    X

    மும்பையுடன் இன்று பெங்களூர் மோதல்: விராட் கோலி அசத்துவாரா?

    ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக இன்று களமிறங்கும் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி பேட்டிங்கில் அசத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரில் நடக்கும் 12-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விளையாடாத கேப்டன் விராட் கோலி இன்று களம் இறங்குகிறார். இதனால் அவர் மீது ரசிகர்களின எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அசத்துவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வரவு பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாகும். அந்த அணியில் கெய்ல், டிவில்லியர்ஸ் வாட்சன், கேதர் ஜாதவ், சாகல், டைமன் மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    மும்பை அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்று இருக்கிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த மும்பை அடுத்த இரு ஆட்டங்களில் வென்றது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் இருக்கிறது.

    அந்த அணியில் பார்த்தீப் பட்டேல், ஹர்பஜன்சிங், ஹிர்த்திக் பான்டியா, நிதிஷ் ராணா, மலிங்கா போன்ற வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை 19 முறை மோதி உளளன. இதில் மும்பை 11 முறையும், பெங்களூர் 8 முறையும் வெற்றி பெற்றன.

    இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடக்கும் ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் மோதுகின்றன.

    குஜராத் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார். பிரன்டன் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக், வெய்ன் சுமித், பிரவீன் சயர் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

    புனே அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2-ல் தோல்வி அடைந்தது. ரகானே, டோனி, பென் ஸ்டோக்ஸ், டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாகீர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கடந்த போட்டியில் விளையாடாத ஸ்டீவன் சுமித் இன்று விளையாடுகிறார். முன்னாள் கேப்டன் டோனி பேட்டிங்கில் சொதப்புவது அந்த அணிக்கு பாதிப்பாக இருக்கிறது. அவர் எழுச்சி பெற்றால் புனேக்கு சாதகமாக அமையும்.

    தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோற்று உள்ளதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நெருக்கடியில் புனே உள்ளது.
    Next Story
    ×