search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி
    X

    ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி

    ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார்.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் சந்திக்க வேண்டும். அதன்படி நேற்றி நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி முதல் லெக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - பேயர்ன் முனிச் அணிகள் மோதின. பேயர்ன் முனிச் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் பேயர்ன் முனிச் அணி சிறப்பாக விளையாடியது.

    அந்த அணியின் விடால் முதல் கோலை பதிவு செய்தார். பாதி நேரம் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை விடால் வீணடித்துவிட்டார். இதனால் முதல் பாதி நேரத்தில் பேயர்ன் முனிச் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    ஆனால் 2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோ சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2-வது கோலை ரொனால்டோ அடிக்கும்போது ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளில் 100-வது கோலை பதிவு செய்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    மற்றொரு போட்டியில் லெங்செஸ்டர் சிட்டி அணியை அட்லெடிகோ மாட்ரிட் 1-0 என வீழ்த்தியது. டார்ட்மண்ட் அணியை 3-2 என மொனாகோ வீழ்த்தியது.
    Next Story
    ×