என் மலர்
செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் சொந்த ஊரில் (கொல்கத்தா ஈடன்கார்டன்) விளையாடப்போகும் முதல் போட்டி இதுவாகும். அதனால் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை பந்தாடிய கொல்கத்தா அணி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்து கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது.
அதிரடி வீரர் கிறிஸ்லின் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்பில்லை. இது கொல்கத்தாவுக்கு பின்னடைவு என்றாலும், சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இணைந்திருப்பது கொல்கத்தாவுக்கு சாதகமான அம்சமாகும். இங்கு சுனில் நரின், ஷகிப் அல்-ஹசன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் இரு ஆட்டங்கள் முறையே புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை எளிதில் வீழ்த்தியது. புதிய கேப்டன் மேக்ஸ்வெல்லின் அதிரடியின் பேட்டிங் (44 ரன், 43 ரன்) மற்றும் பந்து வீச்சாளர்கள் இரு ஆட்டங்களிலும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் அந்த அணி வியூகங்களை வகுத்துள்ளது.

பயிற்சியில் பஞ்சாப் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா.
முன்பு கொல்கத்தா அணிக்காக விளையாடி இப்போது பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றும் விருத்திமான் சஹா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநில போட்டிகள், ரஞ்சி, ஐ.பி.எல். என்று இங்கு ( ஈடன்கார்டன்) இளம் வயதில் இருந்தே நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இங்குள்ள சூழல் எனக்கு பழக்கப்பட்ட ஒன்று.
இப்போது நான் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறேன். எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். கேப்டன் மேக்ஸ்வெல்லும், தலைமை நிர்வாகி ஷேவாக்கும் எதை பற்றியும் கவலைப்படாமல் நெருக்கடியின்றி இயல்பாக ஆடும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். உங்களது பங்களிப்பு 10 பந்துகளில் 20 ரன்கள் என்றாலும் அதனை உற்சாகமாக செய்யுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்தை அடுத்து வரும் ஆட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்’ என்றார்.

Next Story