search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை நைய புடைத்தது யுவான்டஸ்
    X

    சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை நைய புடைத்தது யுவான்டஸ்

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை 3-0 என நையப் புடைத்துள்ளது யுவான்டஸ்.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் சந்திக்க வேண்டும். அதன்படி முதல் காலிறுதி போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் நேற்று நள்ளிரவு யுவான்டஸிற்கு சொந்தமான மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முன்னணி அணியான பார்சிலோனாவிற்கு யுவான்டஸ் கடும் சவாலாக விளங்கியது. சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது யுவான்டஸ். குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான பவுலோ டைபாலா முதல் பாதி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 7-வது நிமிடத்தில் ஒரு கோலும், 22-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். பின்னர் 55-வது நிமிடத்தில் சியேலினி மேலும் ஒரு கோல் அடிக்க யுவான்டஸ் 3-0 என அபாரமாக வெற்றி பெற்றது. பார்சிலோனா எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.



    இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் 3-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் 20-ந்தேதி நடக்கிறது. இதில் பார்சிலோன 4-0 என வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.



    16 அணிகள் கொண்ட சுற்றில் பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) முதல் லெக்கில் 4-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. அதன்பின் பார்சிலோனா 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் எதாவது விசித்திரமான நிகழ்வு நடந்தால் பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×