search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்ப முடிகிறதா!!! 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்த வங்காளதேச பந்து வீச்சாளர்
    X

    நம்ப முடிகிறதா!!! 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்த வங்காளதேச பந்து வீச்சாளர்

    மோசமான தீர்ப்புகளை வழங்கிய நடுவர்களை பழிவாங்குவதற்காக வங்காள தேச பந்து வீச்சாளர் 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.
    வங்காள தேசத்தில் டாக்கா 2-வது டிவிசன் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு போட்டியில் ஆக்சியோம் - லால்மதியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லால்மதியா அணி 14 ஓவரில் 88 ரன்களில் சுருண்டது. ஆனால், நடுவர்கள் மோசமான தீர்ப்பு வழங்கியதால்தான் நாங்கள் 88 ரன்னில் சுருண்டோம் என்று அந்த அணி பேட்ஸ்மேன் குற்றம்சாட்டினார்கள்.

    இதுகுறித்து அந்த அணியின் பொது செயலாளர் அட்னான் டிபோன் கூறுகையில் ‘‘டாஸ் போட்டதில் இருந்ததே இந்த பிரச்சினை தொடர்ந்தது. டாஸ் சுண்டப்பட்ட நாணயத்தை பார்க்க எங்கள் அணியின் கேப்டனை நடுவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் பேட்டிங் செய்ய சென்றபோது, நாங்கள் எதிர்பார்த்ததுபோல், நடுவர்களின் முடிவு எங்களுக்கு எதிராக அமைந்தது’’ என்றார்.

    பின்னர் லால்மதியா அணி பந்து வீச வந்தது. முதல் ஓவரை சுஜோன் மெஹ்முத் வீசினார். தங்கள் அணிக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்த அவர், தொடர்ந்து வைடாகவும், நோபாலாகவும் வீச ஆரம்பித்தார். முறையாக நான்கு பந்துகள் வீசுவதற்குள் 65 வைடு, 15 நோபாலை வீசினார். இந்த நான்கு பந்திலும் எதிரணி பேட்ஸ்மேன் 12 ரன்கள் அடித்தார். இதனால் அந்த அணி 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    நான்கு பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்தது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். 92 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறித்து அட்னான் டிபோன் கூறுகையில் ‘‘எங்கள் அணியின் இளம் வீரர்கள் அனைவரும் 17 வயது முதல் 19 வயதுடையவர்கள். அவர்களால் அநியாயத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதன்விளைவாக 92 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளனர்” என்றார்.
    Next Story
    ×