search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப்க்கு எதிரான தோல்விக்கு நானே பொறுப்பு: ஷேன் வாட்சன்
    X

    பஞ்சாப்க்கு எதிரான தோல்விக்கு நானே பொறுப்பு: ஷேன் வாட்சன்

    10-வது ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு நானே பொறுப்பு என பெங்களூர் அணி கேப்டன் ஷேன் வாட்சன் வருத்தம் தெரிவித்தார்.
    இந்தூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவரில் 4 விக்கெட் 148 ரன் எடுத்தது. டிவில்லியர்ஸ் 46 பந்தில் 89 ரன் எடுத்தார். அவர் 9 சிக்சர், 3 பவுண்டரி அடித்தார்.

    149 ரன் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெற்றது. ஹசிம் அம்லா 58 ரன்னும், மேக்ஸ்வெல் 43 ரன்னும் எடுத்தனர்.

    3-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருக்கு 2-வது தோல்வியாகும். தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் கூறியதாவது:-



    எங்களது தொடக்கம் நன்றாக அமையவில்லை. நான் முதல் ஓவரிலேயே அவுட் ஆகிவிட்டேன். நிச்சயமாக இது என்னுடைய தவறு தான். 170 ரன் முதல் 185 ரன் வரை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    பந்துவீச்சிலும் திறமையை வெளிகாட்டவில்லை. நான் எதிர்பார்த்ததைவிட பனி தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்தது என்றார்.

    பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கூறுகையில், போட்டி தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கிறோம். வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம். பவர் பிளேவில் 23 ரன் மட்டுமே கொடுத்தது சிறந்த செயல்பாடாகும் என்றார்.

    பஞ்சாப் அணி தனது அடுத்த ஆட்டத்தில் 13-ந்தேதி கொல்கத்தாவுடன் மோதுகிறது. பெங்களூர் அணி 14-ந்தேதி மும்பையை சந்திக்கிறது.
    Next Story
    ×