search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.: பஞ்சாப் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்கு வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
    X

    ஐ.பி.எல்.: பஞ்சாப் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்கு வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக வாட்சன், விஷ்ணு ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் வாட்சன் 1 ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். விஷ்ணு வினோத் 7 ரன்னில் வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவ் 1 ரன்னில் வெளியேற பெங்களூரு அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

    ஒருபக்கம் விக்கெட்டுக்கள் இழந்தாலும் மறுமுனையில் டி வில்லியர்ஸ் நிலைத்து நின்று விளையாடினார். இவருக்கு துணையாக நின்ற மந்தீப் சிங் 28 ரன்கள் எடுத்து வெளியேற, 16-வது ஓவரில் இருந்து வாணவேடிக்கையை ஆரம்பித்தார் டி வில்லியர்ஸ். பந்தை சிக்சருக்கு விரட்டிக் கொண்டே இருந்தார். இவரது அதிரடியால் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.

    டி வில்லியர்ஸ் 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். பின்னி 18 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு அணி கடைசி 4 ஓவரில் 68 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×