search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி ஆர்வத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X

    பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி ஆர்வத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக இன்று மோதும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    இந்தூர்:

    ஐ.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- வாட்சன் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனேயை வீழ்த்தியது. சொந்த மண்ணில் தொடர்ந்து ஆடுவதால் அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கேப்டன் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணி பேட்டிங்கில் கூடுதல் பலம் பொருந்தியவர். புனே அணிக்கு எதிரான அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை நெகிழ வைத்தது. முதுகெலும்பாக இருக்கும் அவருடன் மில்லர், ஹசிம் அம்லா, வோரா, விருத்திமான் சகா, அக்‌ஷர் பட்டேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.



    விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 35 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 15 ரன்னில் வீழ்த்தியது. பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் பெங்களூர் அணி இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் அந்த அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜேதர் ஜாதவ், கேப்டன் வாட்சன், மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். டிவில்லியர்ஸ் உடல் தகுதி பெற்று அணிக்கு திரும்பினால் கூடுதல் பலமாக அமையும்.

    இரு அணிகளும் இதுவரை 18 முறை மோதியுள்ளன. பஞ்சாப் 10 போட்டியிலும், பெங்களூர் 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் சிறந்த அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×