search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டியில் மாறாத வீரர்கள்... அதிக பேரை கேப்டனாக்கிய அணி...
    X

    ஐ.பி.எல். போட்டியில் மாறாத வீரர்கள்... அதிக பேரை கேப்டனாக்கிய அணி...

    2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்துள்ள அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலும் அணியே மாறாமல் விளையாடிய வீரர்கள் யார் என்பதை பற்றியும், அதிகம் பேரை கேப்டன் பொறுப்பில் அமர்த்திய அணி எது என்பதையும் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
    * இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 60 ஆட்டங்கள் 47 நாட்கள் நடைபெறும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.21 கோடி வழங்கப்படும்.

    * கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் மூன்று முறை மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையை படைக்கும்.

    * 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்துள்ள அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலும் அணியே மாறாமல் விளையாடிய வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் விராட் கோலி (பெங்களூரு), மற்றொருவர் ஹர்பஜன்சிங் (மும்பை இந்தியன்ஸ்). மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வந்தாலும் கடந்த ஆண்டு காயத்தால் வரவில்லை. இதே போல் 2008-ம் ஆண்டில் இருந்தே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மட்டும் ஆடும் ஷான் மார்ஷ் 2009-ம் ஆண்டு சீசனில் தசைப்பிடிப்பால் கால்பதிக்கவில்லை.

    * கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மேக்ஸ்வெல் அந்த அணியின் 10-வது கேப்டன் ஆவார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிகம் பேரை கேப்டன் பொறுப்பில் அமர்த்திய அணி என்ற பெருமையை பஞ்சாப் பெறுகிறது.



    * அணிக்கு வெற்றித் தேடி தந்ததில் மட்டுமல்லாமல், டாஸில் (71 முறை) அதிக முறை வெற்றி பெற்ற கேப்டன் என்ற சிறப்புக்குரிய டோனி (தற்போது புனே அணி) முதல் முறையாக கேப்டன் பதவி இல்லாமல் விளையாட உள்ளார்.

    * ஐ.பி.எல்.-ல் ஒரே இன்னிங்சில் அரைசதத்துடன் 4 விக்கெட்டுகளை இரண்டு முறை எடுத்த ஒரே வீரர் யுவராஜ்சிங் (ஐதராபாத் அணி) ஆவார்.

    * ஆயிரம் ரன்களுக்கு மேல் (1,262 ரன்) மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் (122 விக்கெட்) இரண்டும் ஒரு சேர எடுத்த ஒரே வீரர் வெய்ன் பிராவோ (குஜராத் லயன்ஸ்) தான்.

    * பெங்களூரு அணி மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது.

    * இன்னிங்சில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் பவுலர் ஜேம்ஸ் பவுல்க்னெர் (குஜராத் லயன்ஸ்) ஆவார்.
    Next Story
    ×