search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு வந்தார் டி வில்லியர்ஸ்: ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தார்
    X

    பெங்களூரு வந்தார் டி வில்லியர்ஸ்: ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தார்

    360 டிகிரி என்று அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வி்ல்லியர்ஸ் பெங்களூரு வந்தடைந்துள்ளார். அவர் ஐ.பி.எல். போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
    ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை விரட்டுவதில் வல்லமை படைத்தவர். இதனால் டி வில்லியர்ஸ் செல்லமாக 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.

    ஐ.பி.எல். சீசன்-10 நாளைமறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த தொடருக்காக வெளிநாட்டு வீரர்கள் அந்ததந்த அணியில் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். பெங்களூரு அணியில் முன்னணி வீரரான லோகேஷ் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். விராட் கோலி ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

    இதற்கிடையே உள்ளூர் போட்டியில் டி வில்லியர்ஸ் முதுகு வலி காரணமாக களம் இறங்கவில்லை. இதனால் இவரும் அணியில் இடம்பெறுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் கோலி இல்லையென்றால் அணியை வழி நடத்திச் செல்லும் இடத்தில் டி வில்லியர்ஸ் இருந்தார்.

    மூன்று முன்னணி வீரர்கள் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்பட்டது, அந்த அணிக்கு கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அணிக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நான் பெங்களூரு வந்துவிட்டேன். மீண்டும் இங்கே வருவது சிறப்பானது என்று டுவிட்டர் பக்கத்தில் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து டி வில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மீண்டும் பெங்களூரு வந்தது சிறப்பானது. ஐ.பி.எல். சீசன் 2017 தொடங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், come on @RCBTweets! #PlayBold’’ என்று பதிவு செய்துள்ளார்.

    இதனால் டி வில்லியர்ஸ் பெங்களூரு அணிக்காக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.
    Next Story
    ×