search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் பெங்களூர் அணிக்கு வாட்சன் கேப்டன்?
    X

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் பெங்களூர் அணிக்கு வாட்சன் கேப்டன்?

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வாட்சன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

    பெங்களூர்:

    10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி கேப்டன் வீராட்கோலி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனாக உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல்லில் சில ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அந்த அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுலும் தோள்பட்டை காயத்தால் விலகி உள்ளார்.

    கோலி விளையாடாததால் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக விலகினார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    டிவில்லியர்சும் விலகினால் கேப்டனாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.


    அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவரை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் ஷேன் வாட்சன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வீராட்கோலி, லோகேஷ் ராகுல் விலகலால் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன். எந்த வரிசையிலும் விளையாட தயார்தான். வீராட்கோலி கேப்டன் பதவியில் இருக்கிறாரோ, இல்லையோ நான் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவியாக இருப்பேன். குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×