search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொல்லார்டு, சிம்மன்ஸ் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்
    X

    பொல்லார்டு, சிம்மன்ஸ் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்.
    ஐ.பி.எல். சீசன்- 10 கிரிக்கெட் திருவிழா வரும் 5-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தங்களுடைய வீரர்களை ஒருங்கிணைத்து பயிற்சியை தொடங்கியுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

    அந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கீரன் பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த தொடரின் கடைசி போட்டி நாளை (ஏப்ரல் 2-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டி முடிந்த கையோடு அவர்கள் இந்தியா புறப்படுகிறார்கள்.

    இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘பொல்லார்டு மற்றும் சிம்மன்ஸ் ஏப்ரல் 4-ந்தேதி மும்பை வந்தடைவார்கள். அதன்பின் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்கள்.



    2015-ம் ஆண்டு மும்பை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் முக்கிய காரணமாக இருந்தார்கள். பொல்லார்டு 16 போட்டியில் 419 ரன்னும், சிம்மன்ஸ் 540 ரன்னும் குவித்தார்கள்.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடக்க போட்டியில் மலிங்கா மற்றும் அசேலா குணரத்னேவை இழக்கிறது. ஏனென்றால், அதே நேரத்தில் இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடக்கிறது. அதன்பின் 7-ந்தேதி அவர்கள் மும்பை அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் புனே அணியை 6-ந்தேதி சந்திக்கிறது.
    Next Story
    ×