search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியின் நண்பர்கள் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்
    X

    விராட் கோலியின் நண்பர்கள் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

    ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் கிடையாது என விராட் கோலி தெரிவித்த கருத்து தனக்கு ஏமாற்றமளிப்பதாக, அந்நாட்டு பயிற்சியாளர் டேரன் லெக்மான் தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.



    டெஸ்ட் தொடருக்குப்பின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் இனி களத்திற்கு வெளியேயும் நண்பர்கள் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக சீண்டியதால் கோலி இவ்வாறு தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்த கருத்து தனக்கு ஏமாற்றமளிப்பதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லெக்மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் “ விராட் கோலியின் கருத்து எனக்கு ஏமாற்றமளிக்கிறது. எனினும் அது அவரது சொந்தக் கருத்து இல்லையா?

    இந்திய வீரர் ரகானே கேப்டனாக செயல்பட்ட விதம் எனக்கு திருப்தியளிக்கிறது. அவர் ஒரு சிறந்த வீரர் என நான் கருதுகிறேன்.டெஸ்ட் மேட்சைப் பொறுத்தவரை 100 ரன்கள் நாங்கள் குறைவாக எடுத்து விட்டோம். இது எங்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும் வீரர்களின் பங்களிப்பை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

    இந்த சுற்றுப்பயணம் மூலமாக வீரர்கள் நிறைய கற்றுக்கொண்டனர். ஆட்டத்தின் முடிவு வீரர்களை காயப்படுத்தி விட்டது ஆனால் அவர்களின் உழைப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
    Next Story
    ×