search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி
    X

    உலக கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

    தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    2018-ம் ஆண்டுக்கான உலககோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா- பொலிவியா அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அர்ஜென்டினா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது


    தடை காரணமாக லியோனல் மெஸ்சி விளையாட முடியாமல் போனது அர்ஜென்டினா அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. சிலிக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரிடம் ஆவேசமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் மெஸ்சி மீது 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார்.
    Next Story
    ×