search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தொடரில் 25 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா முதலிடம்
    X

    டெஸ்ட் தொடரில் 25 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா முதலிடம்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    சென்னை:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

    118 இன்னிங்சில் 213.1 அவர் வீசி 464 ரன்கள் கொடுத்து அவர் 25 விக்கெட் வீழ்த்தினார். 63 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். 2 தடவை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

    டெஸ்ட் தொடரில் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றுவது 2-வது முறையாகும்.

    இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த தொடரில் ஜடேஜா 5 டெஸ்ட் தொடரில் 26 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்தார். சராசரி 27.38 ஆகும். 5 விக்கெட்டுக்கு மேல் ஒரு முறை எடுத்துள்ளார். 41 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

    மற்ற இந்திய பவுலர்களில் உமேஷ் யாதவ் 17 விக்கெட் வீழ்த்துகிறார். ஒரு தொடரில் அவர் தற்போது தான் அதிகமான விக்கெட் எடுத்துள்ளார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 2011-12-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் 14 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர்கள் நாதன் லயன், ஓகிபே, தலா 19 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இருவரும் 2 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    ஓகிபே 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும். லயன் 50 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஹாசல்வுட் 9 விக்கெட்டும், கும்மினஸ் (2 டெஸ்ட்) 7 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் 499 ரன்கள் குவித்து முதல் இடத்தை பிடித்தார். சராசரி 71.28 ஆகும். 3 சதம் அடித்து உள்ளார். அதிகபட்சமாக 178 ரன் குவித்து இருந்தார்.

    புஜாரா 405 ரன் குவித்து 2-வது இடத்தை பிடித்தார். ஒரு சதமும், 2 அரை சதமும் இதில் அடங்கும். சரசரி 67.50 ஆகும். அதிகபட்சமாக 202 ரன் குவித்து இருந்தார். ராகுல் 355 ரன்கள் எடுத்து 3-வது இடத்தை பிடித்தார். சராசரி 59.16 ஆகும். 5 அரை சதம் அடித்து முத்திரை பதித்தார்.
    Next Story
    ×