search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரம்சாலா டெஸ்ட்: இந்தியா வெற்றிக்கு இன்னும் 87 ரன்கள் தேவை
    X

    தரம்சாலா டெஸ்ட்: இந்தியா வெற்றிக்கு இன்னும் 87 ரன்கள் தேவை

    தரம்சாலாவில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் தொடரில் வெற்றி பெற இந்தியா இன்னும் 87 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
    தரம்சாலா:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி  332 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ்  3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    தொடர்ந்து 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    இதையடுத்து 106  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 87 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டி மற்றும் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு தினங்கள் மீதம் இருப்பதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    Next Story
    ×