search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?
    X

    தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    தர்மசாலா:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.



    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும். ‘டிரா’ வில் முடிந்தால் தொடர் சமநிலை பெறும்.

    தர்மசாலா ஆடுகளம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா என்று எதிர் பார்க்கப்படுகிறது. முதல் 2 டெஸ்டும் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது.

    ராஞ்சி ‘பிட்ச்‘ பேட்டிங்குக்கு அதிகமான சாதக நிலையில் இருந்தது. ஆனாலும் பந்துவீச்சுக்கு சிறிது ஏற்ற வகையில் இருந்தது. அஸ்வினின் பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை.

    தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும். இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் சுனில் சவுகான் கூறியதாவது:-



    முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும். ரஞ்சி டிராபி போட்டியில் வேகப்பந்து வீச்சை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். அதே நிலையில் தான் டெஸ்ட் போட்டியிலும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தர்மசாலா மைதானத்தில் இதுவரை 3 ஒருநாள் போட்டி மற்றும் எட்டு 20 ஓவர் ஆட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×