search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    110 ஓவரில் வெறும் 3 விக்கெட்டுகள்: ராஞ்சியில் அஸ்வின், லயன் ஜொலிக்காத காரணம் என்ன?
    X

    110 ஓவரில் வெறும் 3 விக்கெட்டுகள்: ராஞ்சியில் அஸ்வின், லயன் ஜொலிக்காத காரணம் என்ன?

    ராஞ்சி டெஸ்டின் ஆஃப் ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் நாதன் லயன் ஜொலிக்காததற்கு மிட்செல் ஸ்டார்க் களத்தில் இல்லாததுதான் காரணம் என கங்குலி கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. சுழற்பந்து வீச்சில் இந்திய வீரர் ஜடேஜா மட்டும் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    லெக் ஸ்டம்பிற்கு சற்று வெளியே ஆடுகளம் கரடுமுரடாக (rough) மாறியிருந்தது. அந்த இடத்தை பயன்படுத்தி இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினார்.

    ஆனால் ஆஃப் ஸ்டம்பிற்கு வலது புறம் ஐந்து நாட்கள் ஆகியும் ஆடுகளம் கரடுமுரடாக மாறவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 34 ஓவர்கள் வீசிய அஸ்வின் 114 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே அடங்கும். 2-வது இன்னிங்சில் 30 ஓவர்கள் வீசி 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். 10 மெய்டன் ஓவர்கள் வீசினார்.

    ஆஸ்திரேலியாவின் வலது கை சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் முதல் இன்னிங்சில் 46 ஒவர்கள் வீசி 163 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும். 2-வது இன்னிங்சில் பந்து வீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

    தலைசிறந்த பந்து வீச்சாளர்களான இவர்கள் இரண்டு பேரும் 110 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளனர். இதற்கு மிட்செல் ஸ்டார்க்கின் மிஸ்சிங்தான் காரணம் என்று கங்குலி கூறியுள்ளார்.



    இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் ஓவர் தி ஸ்டிக் எடுத்து பந்து வீசுவார். இதனால் அவர் கால் பதிக்கும் இடம் கரடு முரடாக மாறும். அப்படி மாறினால் அந்த இடத்தில் ஆஃப் ஸ்பின்னர் பந்து வீசும்போது அதிக அளவில் டர்ன் ஆகும். அந்த வாய்ப்பில்லை.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ராஞ்சி டெஸ்டில் ஆஃப் ஸ்பின்னர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை. இதற்கு காரணம் மிட்செல் ஸ்டார்க் இல்லாததுதான். அவர் இல்லாததால் ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே கரடுமுரடான (Rough) பகுதி உருவாகாமல் போய்விட்டது’’ என்றார்.
    Next Story
    ×