search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை
    X

    ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை

    பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ போட்டியின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார்.
    லாகூர்:

    பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ‌ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய 5 வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலிகான் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    பாகிஸ்தான் பிரிமீயர் ‘லீக்’ ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சர்வதேச புலனாய்வு அமைப்பு (எப்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குழு கேட்டுக்கொண்டதன் பேரில் 5 வீரர்களும் நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    சூதாட்டத்தில் சிக்கிய முகமது இர்பானும், கலாத் லத்தீப்பும் எப்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். வீரர்களின் செல்போன் லேப்டாப்களை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் எப்.ஐ.ஏ கேட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்காக சாட்சியங்கள் கிடைக்குமா? என்பதற்காக இதை கேட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நடுவர் மன்ற குழுவை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற லாகூர் ஐகோர்ட்டு நீதிபதி ஹைதர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் தவுகீர் ஜீயா, முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஹசிம் பாரி ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்த குழு வருகிற 24-ந்தேதி சர்ஜில்கான், காலித் லக்தீப்பிடம் விசாரணை நடத்துகிறது.
    Next Story
    ×