search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம் இல்லை
    X

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம் இல்லை

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று அந்த அணியின் தேர்வு குழு உறுப்பினர் காவின் லார்சென் தெரிவித்துள்ளார்.
    வெலிங்டன் :

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே டுனெடினில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    வெலிங்டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.



    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று அந்த அணியின் தேர்வு குழு உறுப்பினர் காவின் லார்சென் தெரிவித்துள்ளார். முந்தைய போட்டிகளில் ஆடிய அணியுடன் களம் காணுவோம் என்று தெரிவித்துள்ள அவர் ஹாமில்டன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும். எங்கள் வீரர்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

    காயம் அடைந்த பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் கடைசி டெஸ்டிலும் விளையாடமாட்டார். காயத்தில் இருந்து தேறி வரும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×