search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    525 பந்துகளை சந்தித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய புஜாரா
    X

    525 பந்துகளை சந்தித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய புஜாரா

    ராஞ்சி டெஸ்டில் புஜாரா 525 பந்துகளை சந்தித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 178 ரன்கள் அடித்தார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. 3-வது நபராக களம் இறங்கிய புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்த அவர், 525 பந்தில் 21 பவுண்டரியுடன் 202 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    525 பந்துகளை சந்தித்த புஜாரா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்விவரம் வருமாறு-

    1. 521 பந்தில் இரட்டை சதம் அடித்தன் மூலம் மெதுவாக இரட்டை சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் பி. குருப்பு 548 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார். அதன்பின் மார்வன் அட்டப்பட்டு 531 பந்திலும், டி.ஹௌட்டன் 524 பந்திலும், கேரி கிர்ஸ்டன் 522 பந்திலும், தற்போது புஜாரா 521 பந்திலும், கிராண்ட் பிளவர் 520 பந்திலும் இரட்டை சதம் அடித்துள்ளனர்.



    2. 505-வது பந்தை சந்திக்கும்போது இந்திய மண்ணில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 2005-ல் பெங்களூருவில் 504 பந்துகளை சந்தித்ததுதான் அதிகபட்ச பந்துகளாக இருந்தது. தற்போது 525 பந்துகளை சந்தித்து புஜாரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2010-ம் ஆண்டு அம்லா 473 பந்துகளை சந்தித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    3. 496 பந்துகளை சந்தித்த போது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டிராவிட் 2004-ம் ஆண்டு ராவல் பிண்டியில் 495 ரன்கள் எடுத்ததே இந்திய பேட்ஸ்மேன் சந்தித்த அதிகபட்ச பந்தாக இருந்தது. சித்து 491 பந்துகளை சந்தித்து தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.



    4. புஜாரா இதற்கு முன்பு 2012-ல் இங்கிலாந்திற்கு எதிராக அதிகபட்சமாக 389 பந்துகளையும், அதே ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக மும்பையில் 350 பந்துகளையும் சந்தித்திருந்தார்.
    Next Story
    ×