search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களின் தவறான நடவடிக்கைக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 25 ஆயிரம் டாலர் அபராதம்
    X

    வீரர்களின் தவறான நடவடிக்கைக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 25 ஆயிரம் டாலர் அபராதம்

    செல்சியாவிற்கு எதிரான போட்டியில் நடுவரிடம் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதால், அந்த அணிக்கு 25 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    எஃப்.ஏ. கோப்பைக்கான காலிறுதி போட்டி ஒன்றில் கடந்த திங்கட்கிழமையன்று மான்செஸ்டர் யுனைடெட், செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் செல்சியா 1-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆண்டர் ஹெராராவை நடுவர் மைக்கேல் ஆலிவர் வெளியேற்றினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நடுவர் ஹெராராவை வெளியேற்றிய போது, மற்ற வீரர்கள் நடுவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



    இதனால் வீரர்களை கட்டுபடுத்த முடியாமல் போன மான்செஸ்டர் அணிக்கு, போட்டியின் விதிமுறையை மீறியுள்ளதாக 25 ஆயிரம் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து அசோசியேசன் கூறியிருந்தது. இந்த தொகையை செலுத்த மான்செஸ்டர் அணியும் சம்மதம் தெரிவித்துள்ளது.

    கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியின்போது ரசிகர்களோ, வீரர்களோ விதிமுறையை மீறினால் அதற்கு அந்தந்த கால்பந்து கிளப்புதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×