search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக் காலிறுதி அட்டவணை வெளியீடு: பார்சிலோனா- யுவான்டஸ்; ரி.மா.- பேயர்ன் முனிச்
    X

    சாம்பியன்ஸ் லீக் காலிறுதி அட்டவணை வெளியீடு: பார்சிலோனா- யுவான்டஸ்; ரி.மா.- பேயர்ன் முனிச்

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான காலிறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பார்சிலோனா யுவாண்டசையும், ரியல் மாட்ரிட் பேயர்ன் முனிச் அணியையும் எதிர்கொள்கிறது.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கிடையில் நடைபெறும் பெரிய கால்பந்து தொடர் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக். இந்த தொடரில் யுவான்டஸ், பார்சிலோனா, டோர்ட்மண்ட், மொனாகோ, அட்லெடிகோ மாட்ரிட், லெய்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், பேயர்ன் முனிச் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இன்று காலிறுதியில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்ற அட்டவணை வெளியிடப்பட்டது.

    அதன்படி ஏப்ரல் 12-ந்தேதி யுவான்டஸ் - பார்சிலோனா அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் டோர்ட்மண்ட் - மொனாகோ அணிகள் மோதுகின்றன.

    ஏப்ரல் 13-ந்தேதி அட்லெடிகோ மாட்ரிட் - லெய்செஸ்டர் சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு போட்டியில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.

    ஏப்ரல் 19-ந்தேதி லெய்செஸ்டர் சிட்டி - அட்லெடிகோ மாட்ரிட் அணிகளும், ரியல் மாட்ரிட் - பேயர்ன் முனிச் அணிகளும் மோதுகின்றன.

    ஏப்ரல் 20-ந்தேதி மொனாகோ - டோர்ட்மண்ட் அணியும், பார்சிலோனா - யுவான்டஸ் அணியும் மோதுகின்றன.

    காலிறுதியில் மோதும் அணிகள் தங்களுடைய சொந்த மைதானத்தில் ஒரு போட்டியிலும் (லெக்-1), எதிரணியின் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியிலும் (லெக்-2) மோத வேண்டும்.
    Next Story
    ×