search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    119 வருட ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தார் ரென்ஷா
    X

    119 வருட ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தார் ரென்ஷா

    20 வயதிற்குள் 500 ரன்கள் எடுத்து 119 வருட கால ஆஸ்திரேலியாவின் சாதனையை இன்றைய ராஞ்சி டெஸ்டில் முறியடித்துள்ளார் தொடக்க வீரர் ரென்ஷா.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரரான ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புனே, பெங்களூரு டெஸ்டில் அரைசதம் அடித்தார்.

    இன்று ராஞ்சியில் தொடங்கிய போட்டியில் 44 ரன்கள் எடுத்தார். இவர் 11வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்துள்ளார். 21 வயதை பூர்த்தி செய்யாத இளம் வீரரான இவர், டெஸ்ட் போட்டிகளில் 500 ரன்கள் எடுத்து 113 வருட ஆஸ்திரேலிய கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளார்.



    இதற்கு முன் கிளெம் ஹில் 21 வயதிற்குள் 482 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது ரென்ஷா முறியடித்துள்ளார்.

    இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 21 வயதிற்குள் 2023 ரன்கள் குவித்திருந்தார். இதில் 7 சதங்களும் அடங்கும். தரம்சாலாவில் 4-வது போட்டி நடக்கிறது. இந்த போட்டியின் 3-வது நாள் அன்று ரென்ஷா 21 வயதை நிறைவு செய்கிறார்.
    Next Story
    ×