search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம்: விராட் கோலிக்கு ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஆதரவு
    X

    டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம்: விராட் கோலிக்கு ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஆதரவு

    ஆஸ்திரேலிய கேப்டன் சுமித்தின் டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரத்தல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடந்து கொண்ட விதம் சரியானதே என்று அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட் ஹாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்கள் இடையே அதிக அளவில் ‘சிலெட்ஜிங்’ நடைபெற்றது. வீரர்களின் உசுப்பேற்றல் இந்த டெஸ்டில் உச்ச கட்டமாக இருந்தது. அதோடு டி.ஆர்.எஸ் முறையை ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் தவறாக பயன்படுத்தியதால் இந்த விவகாரம் பூதாகரமானது.

    டி.ஆர்.எஸ். முறையை கேட்கலாமா வேண்டாமா? என்பது பற்றி களத்தில் இருந்த சுமித் வீரர்களின் அறையை நாடியது. விதிமுறை மீறலாம்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சுமித்தின் இந்த செயலை கடுமையாக சாடினார். நடுவரிடம் முறையிட்டார். தன்னுடைய புத்தி அந்த நேரத்தில் மழுங்கி விட்டதாகவும், தான் அப்படி செய்தது தவறு என்றும் சுமித் கூறி இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வரை இந்த பிரச்சினை சென்றது. ஆனால் ஐ.சி.சி.யோ இந்த பிரச்சினையில் சுமித் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய மீடியாக்கள் விராட் கோலியை கடுமையாக விமர்சித்தன. சமூக வலைதளத்தில் நடத்திய கருத்து கணிப்பில் விலங்குடன் கோலியின் படத்தை வைத்து கேலி செய்தது இருந்தது.

    இந்த நிலையில் டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரத்தல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடந்து கொண்ட விதம் சரியானதே என்று அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட் ஹாக் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    விராட்கோலி ஆர்வமிக்க மற்றும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட் வீரர். தனது கடுமையான பயிற்சி மூலம் அவர் இதை பெற்றிருக்கிறார். ஆடுகளத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று கருதுகிறாரே அதன்படி நடக்க விரும்புகிறவர்.

    விராட் கோலியுடன் மோதும் போது ஆஸ்திரேலியர்கள் அதற்கு அதிகமான திறமையை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் சிலெட்ஜிங்கில் புகழ்பெற்ற அவர்கள் அதை மறந்துவிட வேண்டும்.

    டி.ஆர்.எஸ். சர்ச்சையின் கோலியின் ஆக்ரோ‌ஷம் நியாயமானதே. அவர் சுமித்துடன் மோதியது எனக்கு பிடித்திருந்தது. இது ஒரு வன்முறையோ அல்லது தனிப்பட்ட மோதல் இல்லை. அவர் வெளிப்படுத்திய விதம் சரியானதே. இது ஒரு நல்ல தொடர். நல்ல டெஸ்ட் போட்டியாகும்.

    இந்த விவகாரத்தில் விராட் கோலியோ, சுமித்தோ மற்ற எந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்காது சரியான முடிவே. இதற்காக ஐ.சி.சி.யை பாராடுகிறேன்.

    இவ்வாறு பிராட் ஹாக் கூறியுள்ளார்.
    Next Story
    ×