என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’
    X

    நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’

    மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.
    டுனிடின்:

    நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகள் டுனிடினில் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன.

    33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது.



    இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 2-வது டெஸ்ட் வெல்லிங்டனில் 16-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×