search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள்: விராட் கோலி
    X

    ராஞ்சி டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள்: விராட் கோலி

    பெங்களூர் டெஸ்டை போலவே ராஞ்சி டெஸ்டிலும் சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள் என்று இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் பெங்களூர் டெஸ்டை போலவே ராஞ்சி டெஸ்டிலும் சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள் என்று இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    முதல்முறையாக டெஸ்ட் நடைபெறும் ராஞ்சி ஆடுகளம் பற்றி நாங்கள் அதிகமாக எதுவும் கருத இயலாது. பந்து மெதுவாகவும், மிகவும் தாழ்ந்து தான் எப்போதும் வரும். ஆடுகளத்தை எப்படி சந்திப்பது என்பது பற்றி மனரீதியாக நாங்கள் தயாராகி விட்டோம். உள்ளூர் மைதானம் என்பது எங்களுக்கு சவாலானதே.

    அஸ்வினும், ஜடேஜாவும் உள்ளூர் ஆடுகளத்தில் இந்த சீசனில் மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். பெங்களூர் டெஸ்டை போலவே ராஞ்சி டெஸ்டிலும் அவர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.

    ராஞ்சி ஆடுகளத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெஸ்டில் ஓய்வு பெற்ற வருமான டோனி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தார்.

    இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீரர்களே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒகீபே 12 விக்கெட் கைப்பற்றினார்.

    2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் நாதன் லயன் 8 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா தரப்பில் ஜடேஜா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டும் எடுத்தனர். இதனால் ராஞ்சி ஆடுகளத்திலும் சுழற்பந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டெஸ்ட் தொடரில் ஒகீபே, அஸ்வின் தலா 15 விக்கெட்டை கைப்பற்றி முன்னிலையில் உள்ளனர். லயன் 13 விக்கெட்டும், ஜடேஜா 12 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
    Next Story
    ×