search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு டெஸ்ட் சாதனைத் துளிகள்
    X

    பெங்களூரு டெஸ்ட் சாதனைத் துளிகள்

    பெங்களூரு டெஸ்ட் மூலம் இந்தியா பல சாதனைகள் படைத்துள்ளது. ஆஸ்திரேலியா மோசமாக சாதனைகள் படைத்துள்ளது. அதை விரிவாக பார்ப்போம்.
    பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிற்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 112 ரன்னில் சுருண்டு 75 ரன்னில் தோல்வியடைந்தது.

    இதன்மூலம் அந்த அணி பல்வேறு மோசமான சாதனைகளுக்கு சொந்தமாகியுள்ளது. இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது.

    அதை இங்கே காண்போம்:-

    1. 200 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயித்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 1996-97-ல் அகமதாபாத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1980-81-ல் மெல்போர்ன் மைதானத்தில் 143 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது.

    2. முதல் இன்னிங்சில் இந்தியா 87 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன் 2001-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 274 ரன்கள் பின்தங்கியிருந்தது. 2004-ல் மும்பை வாங்கடே மைதானத்தில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

    3. ஆஸ்திரேலியா அணி கடைசி 6 வி்க்கெட்டுக்களை 12 ரன்னில் இழந்தது. இது விரைவாக விக்கெட்டை இழப்பதில் 3-வது இடமாகும். 12 ரன்னில் 7 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    4. அஸ்வின் 47 டெஸ்டில் 25 முறையாவது 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் விரைவாக 25 முறை ஐந்து வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரிச்சர் ஹாட்லி 62 போட்டிகள் மூலம் 2-வது இடத்திலும், முரளீதரன் 63 போட்டிகள் மூலம் 3-வது இடத்திலும் உள்ளனர். அனில் கும்ப்ளே 86 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 93 போட்டிகளிலும் இந்த சாதனையை பெற்றுள்ளனர்.

    5. அஸ்வின் மொத்தம் 269 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அதிக வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்திய மண்ணில் 30 போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

    6. பெங்களூரு டெஸ்டில் நான்கு பந்து வீச்சாளர்கள் (லயன், ஜடேஜா, ஹசில்வுட், அஸ்வின்) 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். இப்படி நடப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதன்முறை.

    7. இந்தியாவின் கடைசி ஐந்து விக்கெட்டுக்களின் சராசரி 33 மற்றும் 36 ஆகும். புனே டெஸ்டில் 10 மற்றும் 18 ஆகும்.



    8. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் (ஹசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தியிருந்தார்) இந்திய மண்ணில் அதிக வி்க்கெட்டுக்கள் வீழ்த்தியிருப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 1979-ல் ஜெஃப் டைமோக் 67 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.  ஒட்டுமொத்தமாக அவரது சிந்த பந்து வீச்சு இதுவாகும்.

    9. ஆசிய மண்ணில் நாதன் லயன் முதல் இன்னிஙசில் 38 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சராசரி 30.84 ஆகும். ஆனால் 2-வது இன்னிங்சில் 17 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். சராசரி 47.82 ஆகும். இந்திய மண்ணில் முதல் இன்னிங்சில் 20 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

    90 ரன்களுக்கு மேல் சென்று சதம் அடிக்காமல் அவுட்டாவது புஜாராவிற்கு இதுவே முதல் முறையாகும். இன்றைய போட்டியில் அவர் 92 ரன்னில் ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
    Next Story
    ×