search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே- புஜாரா ஜோடி எங்களை புண்படுத்தி விட்டது: தோல்வி குறித்து ஸ்மித் கருத்து
    X

    ரகானே- புஜாரா ஜோடி எங்களை புண்படுத்தி விட்டது: தோல்வி குறித்து ஸ்மித் கருத்து

    பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ரகானே - புஜாரா ஜோடி எங்களை புண்படுத்திவிட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 87 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 120 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அப்போது இந்தியா 37 ரன்கள்தான் முன்னிலைப் பெற்றிருந்தது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஐந்தாவது வி்க்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் இதுதான் ஒரு ஜோடியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஜோடியின் சிறந்த ஆட்டத்தால்தான் இந்தியா 187 ரன்கள் முன்னிலைப் பெற முடிந்தது. புஜாரா 92 ரன்னும், ரகானே 52 ரன்னும் சேர்த்தனர்.

    இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம்தான் எங்களை தோல்விக்குக்குள் தள்ளிவிட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஸ்மித் மேலும் கூறுகையில் ‘‘இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி. எங்கள் வீரர்கள் ஆட்டத்தை பார்த்து பெருமையடைகிறேன். ரகானே - புஜாரா ஜோடி எங்களை புண்படுத்திவிட்டது. அவர்கள் மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இன்று எங்களுக்கு சிறந்த நாட்களாக இல்லை. இந்த ஆடுகளத்தில் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.



    போட்டி முழுவதும் பந்து திடீர் திடீர் என பவுன்சராகவும், மிகத்தாழ்வாகவும் வந்தது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஆடுகளம் மிகவும் கரடு முரடாக இருந்தது. மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டி மிகவும் எளிதாக இருக்காது. இதுபோன்ற ஆடுகளத்தில் அதிக அளவில் நடுவர்கள் முடிவை எதிர்த்து ரிவியூ கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    எந்தவொரு நடுவராக இருந்தாலும் சில நேரம் தவறு செய்வார்கள். ஆனால் அவர்கள் தவறு செய்வதாக நான் சொல்ல வரவில்லை. தொடர் சிறப்பாக உள்ளது. இன்னும் உயிரோட்டத்துடன்தான் இருக்கிறது. 3-வது டெஸ்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
    Next Story
    ×