search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து ஸ்லெட்ஜிங்: இந்திய கேப்டன் விராட் கோலி மீது இயன் ஹீலி கடும் தாக்கு
    X

    தொடர்ந்து ஸ்லெட்ஜிங்: இந்திய கேப்டன் விராட் கோலி மீது இயன் ஹீலி கடும் தாக்கு

    பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதற்கு இயன் ஹீலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர்.

    குறிப்பாக ஸ்மித் - இசாந்த் சர்மா இடையே ஸ்லெட்ஜி்ங் அதிக அளவில் நடைபெற்றது. ஸ்மித் பந்தை எதிர்கொண்ட பின்னர் இரண்டு தோள்பட்டைகளையும் சற்று அங்குமிங்கும் அசைப்பார். இசாந்த் சர்மா பந்து வீசிய பின்னர் தனது முகத்தை வித்தியாசமாக வைத்துக் கொண்டு ஸ்மித்தை போன்று உடல்அசைவை ஏற்படுத்தி வெறுப்பேற்றினார். இப்படி அடிக்கடி நடந்தது. அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடக்க வீரர் ரென்ஷாவிடம், புனே டெஸ்டில் அவர் ‘டாய்லெட் பிரேக்’ எடுத்ததை ஞாபகப்படுத்தினார். மேலும் இந்திய ரசிகர்களை சத்தம் போடச் சொல்லி நெருக்கடியை ஏற்படுத்தினார்.

    ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட விராட் கோலியின் செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி கண்டனம் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இயன் ஹீலி கூறுகையில் ‘‘நெருக்கடி விராட் கோலியை இப்படி ஸ்லெட்ஜிங்கில் கொண்டு வந்து சேர்த்துள்ளது. எதிரணியின் மரியாதையை பெரிய அளவில் விராட் கோலி பெற வேண்டும். ஸ்மித் உடன் அவர் மேற்கொண்ட மோதல் ஏற்கத்தக்கதல்ல.



    நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்று இதற்கு முன் தெரிவித்துள்ளேன். அவருடைய ஆற்றல் மற்றும் உண்மையான ஆக்ரோஷம் இதற்கு முன் எதிரணியை நோக்கி இருக்கும்போது சிறந்ததாக இருந்தது. குறிப்பாக அவர் கேப்டனாக இல்லாதபோது ஆக்ரோஷம் சிறப்பாக இருந்தது. ஆகவே, கோலியின் ஆக்ரோஷம் அவர்களுக்கு சிறந்ததாக இருந்தது.



    ஆனால் தற்போதைய அவரது ஸ்லெட்ஜிங் அவர்களுக்கு நல்லதாக இல்லை. தங்களுடைய அணி வீரர்கள் மீது நெருக்கடியை திணிக்கிறார். உங்களால் அஸ்வின் நெருக்கடிக்கு உள்ளானதை அவரது முகத்தை பார்த்திருந்தால் அறிய முடிந்திருக்கும். கோலியிடம் பெரிய அளவில் விரிசல்கள் உள்ளன’’ என்றார்.

    ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக கில்கிறிஸ்ட் வருவதற்கு முன் அந்த அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்காக 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×