என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வினின் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டேன்: 8 விக்கெட் வீழ்த்திய லயன் சொல்கிறார்
    X

    அஸ்வினின் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டேன்: 8 விக்கெட் வீழ்த்திய லயன் சொல்கிறார்

    பெங்களூரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதற்கு அஸ்வினின் ஏராளமான வீடியோக்களை பார்த்ததுதான் காரணம் என்று லயன் கூறியுள்ளார்.
    புனேவில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் பேட்டிங்கை சாய்த்தார். தற்போது நாதன் லயன் பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    நான் அஸ்வின் பந்து வீசிய ஏராளமான வீடியோக்களை பார்த்தேன். அதனடிப்படையில் பந்து வீச முயற்சி செய்தேன். அத்துடன் என்னுடைய பவுன்சர் முறையையும் சேர்த்து அபாரமாக பந்து வீசினேன் என்று லயன் கூறியுள்ளார்.

    இன்று 8 விக்கெட்டுக்கள் சாய்த்தது குறித்து லயன் கூறுகையில் ‘‘எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரம் எனக்கு மிகப்பெரியதாக அமைந்தது. இன்று என்னுடைய அபார பந்து வீச்சால், முதல்முறையாக இந்திய மண்ணில் சிரிப்பை வெளிப்படுத்துகிறேன்.



    பிக்பாஷ் தொடரின்போது ஜான் டேவிசன் உடன் இணைந்து அதிக அளவில் பயிற்சி எடுத்தேன். தினமும் அரைமணி நேரம் பந்து வீசினேன். அவருக்கு எல்லா வகையிலும் இந்த சிறப்பு சென்றடையும். சில இடங்களில் வெடிப்பு காணப்பட்டது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அஸ்வினின் ஏராளமான பந்து வீச்சு வீடியோக்களை பார்த்துள்ளேன். ஆனால் என்னுடைய சாதகமான பவுன்சர் யுக்தியை அத்துடன் இணைத்துக் கொண்டேன். துபாய் பயிற்சி மையத்தில் 200 ஓவர்கள் வீசினேன். பந்து வீச்சு குழுவுடன் இணைந்து கடின பயிற்சி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் இந்தியாவில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து அதிக அளவில் விவாதித்தோம்’’ என்றார்.
    Next Story
    ×