search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு
    X

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் தயக்கம் தான் காட்டி வருகிறார்கள்.
    துபாய் :

    2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி லாகூரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    இன்று நடைபெறும் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜல்மி அணிகள் இடையிலான இறுதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சந்திக்கும். 2009-ம் ஆண்டில் கராச்சியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த நாட்டுக்கு சென்று விளையாட பெரும்பாலான அணிகள் மறுத்து வருகிறது.



    எனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை உள்ளூரில் வெற்றிகரமாக நடத்தி காட்டினால் வெளிநாட்டு அணிகள் மீண்டும் பாகிஸ்தான் வந்து விளையாட வாய்ப்பு ஏற்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து தயக்கம் தான் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர்கள் கெவின் பீட்டர்சன், லுக் ரைட், டைமல் மில்ஸ், நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ரோசவ் ஆகியோர் பாகிஸ்தான் சென்று விளையாட முடியாத நிலையில் இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இன்னொரு அணியில் இடம் பெற்று இருக்கும் வெளிநாட்டு வீரர்களும் பாகிஸ்தான் சென்று விளையாடுவார்களா? என்பதில் சந்தேகமே நிலவுகிறது.
    Next Story
    ×