search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி மிகப்பெரிய அளவிலும், வலுவான நிலையுடனும் திரும்புவார்: ஸ்டார்க் சொல்கிறார்
    X

    கோலி மிகப்பெரிய அளவிலும், வலுவான நிலையுடனும் திரும்புவார்: ஸ்டார்க் சொல்கிறார்

    புனே டெஸ்டில் 0, 13 என குறைந்த ரன்களில் அவுட்டான விராட் கோலி மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் வலுவான நிலையுடன் திரும்புவார் என்று ஸ்டாக் கூறியுள்ளார்.
    கடந்த சில மாதங்களாக விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வரும் அவருக்கு புனே டெஸ்டில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. முதல் போட்டியில் ஸ்டார்க் பந்தில் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹேண்ட்ஸ்காம்ப் கேட்சை முதல் ஸ்லிப் திசையில் நின்று கோட்டை விட்டார். மேலும் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுக்க விட்டுவி்ட்டார். இதனால் கோலியின் செயல்பாடு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

    சுழற்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொள்ளும் புஜாரா, விராட் கோலியை முதல் இன்னிங்சில் ஒரே ஓவரில் வீழ்த்தி ஸ்டார்க் இந்திய அணியின் ரன் வேட்டைக்கு செக் வைத்தார்.

    முதல் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடாவிட்டாலும் அதிலிருந்து மிகப்பெரிய அளவில், வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘இந்த தொடரில் விராட் கோலியின் விக்கெட்டுதான் முக்கிய விஷயமாக இருக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியும். இந்த தொடரில் நாங்கள் சிறப்பான இடத்தைப் பிடிக்க இன்னும் 6 முறை அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டியுள்ளது. அவர் பெரிய அளவில், வலுவான நிலையுடன் திரும்பி வருவார் என்பது எங்களுக்குத் தெரியும்.



    கோலி ஒரு உலகத்தரமான வீரர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த வருடத்தில் மலைபோன்று ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி நல்ல நிலைமைக்கு திரும்புவார். இதனால் நாங்கள் எச்சரிக்கையாக செல்வோம்.

    முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், டெஸ்ட் தொடரில் ஒரு வெற்றி என்பது தொடரை வெல்ல உதவாது என்பது தெரியும். இன்னும் மூன்று முக்கியமான போட்டிகள் வர இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×