search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே ஆடுகளம் மோசமானது: ஐ.சி.சி. போட்டி நடுவர் அறிக்கை- பி.சி.சி.ஐ. பதிலளிக்க உத்தரவு
    X

    புனே ஆடுகளம் மோசமானது: ஐ.சி.சி. போட்டி நடுவர் அறிக்கை- பி.சி.சி.ஐ. பதிலளிக்க உத்தரவு

    இரண்டரை நாளிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டு வந்த புனே ஆடுகளம் மோசமானது என்று ஐ.சி.சி.யின் போட்டி நடுவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி புனேவில் நடைபெற்றது. முதல் ஓவரில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் இருந்தது. இதனால் போட்டி இரண்டரை நாளில் முடிவுக்கு வந்தது. ஆகவே, ஆடுகளம் குறித்து புகார் எழும்பியது.

    இந்நிலையில் ஐ.சி.சி.யின் போட்டி நடுவர் கிறிஸ் பிராட், ஐ.சி.சி.யின் ஆடுகளம் மற்றும் பவுண்டரி கோடு அருகே பார்வையிடுதல் விதிகள் 3-ன்படி ஐ.சி.சி.க்கு ஒரு அறிக்கை அளித்தார். அதில் ஆடுகளம் மோசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.



    இதனால் வரும் 14 நாட்களுக்குள் ஆடுகளம் குறித்து தங்களுக்கு பதில் அளிக்கும்படி, இந்த அறிக்கையை பிசிசிஐ-க்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. பிசிசிஐயின் விளக்கத்தை ஐ.சி.சியின் பொது மேலாளர் ஜெப் அல்லார்டைஸ், ரஞ்சன் மதுகலே ஆகியோர் ஆய்வு செய்வார்கள்.



    புனே டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 70 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 12 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
    Next Story
    ×