search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 பந்தில் 44 ரன்கள் குவித்த கெய்ல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கராச்சி கிங்ஸ்
    X

    17 பந்தில் 44 ரன்கள் குவித்த கெய்ல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கராச்சி கிங்ஸ்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடரில் கெய்ல் 17 பந்தில் 44 ரன்கள் குவித்ததன் மூலம் கராச்சி கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கராச்சி கிங்ஸ் அணி களம் இறங்கியது.

    கராச்சி கிங்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இஸ்லாமாபாத் அணியின் ஸ்மித், டக்கெட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டக்கெட் 16 ரன்னில் அவுட்டாக, ஸ்மித் 49 ரன்கள் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது.



    பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கராச்சி கிங்ஸ் அணியின் பாபர் ஆசம், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்ல் அதிரடி காட்ட, பாபர் நிதானமாக விளையாடினார். கெய்ல் 17 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 44 ரன்கள் குவித்தார். பாபர் 27 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். பொல்லார்டு 13 பந்தில் 20 ரன்கள் சேர்க்க, ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கராச்சி அணி. இந்த வெற்றியின் மூலம் கராச்சி கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.



    28-ந்தேதி (நாளை) நடைபெறும் முதல் குவாலிபையர் சுற்றில் பெஷாவர் ஷல்மி - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. மார்ச் 1-ந்தேதி நடக்கும் 2-வது குவாலிபையரில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முதல் குவாலிபையரில் தோற்கும் அணியும், 2-வது குவாலிபையரில் வெற்றிபெறும் அணியும் மோதும் 3-வது குவாலிபையர் மார்ச் 3-ந்தேதி நடக்கிறது.

    இறுதிப் போட்டி மார்ச் 5-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டி லாகூரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×