search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா?
    X

    லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா?

    ஜோஸ் மவுரினோ தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
    லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்றிரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- சவுதாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக ஜோஸ் மவுரினோ உள்ளார். மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளர் பதவியை மவுரினோ ஏற்றபின் அந்த அணி சந்திக்கும் மிகப்பெரிய தொடரின் இறுதிப் போட்டி இதுவாகும்.

    இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றால், தான் பதவி ஏற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெறுவார். மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவான்கள் அலெக்ஸ் பெர்குசன், மேட் பஸ்பி ஆகியோர் கூட தங்களது முதல் தொடரில் சாதித்தது கிடையாது. இந்த சாதனை மவுரினோவை நெருங்கி வந்துள்ளது.



    இந்த ஆட்டம் குறித்து மவுரினோ கூறுகையில் ‘‘நீங்கள் ஒரு பொருளை ருசித்து விட்டால், அதை திரும்பவும் ருசித்து பார்க்க விரும்புவார்கள். நீங்கள் வெற்றி பெற்று பழகிவிட்டால், அதன்பின் நீங்கள் வெற்றி பெறாவிடில், அதை கட்டாயம் தவற விடுவீர்கள்.

    எங்களைவிட சிறப்பாக அவர்கள் செயல்பட விரும்பினால் அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆகவே, நாங்கள் அவர்களை எங்களை விட சிறப்பாக செயல்பட விடமாட்டோம். மைதானத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணி வெற்றி பெறும். உத்வேகத்தை சார்ந்து வெற்றி இருக்காது. எங்களை விட அவர்கள் உத்வேகத்தில் உயர்ந்தவர்கள் கிடையாது’’ என்றார்.
    Next Story
    ×