search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா 260 ரன்னுக்கு ஆல்-அவுட்
    X

    ஆஸ்திரேலியா 260 ரன்னுக்கு ஆல்-அவுட்

    புனேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    புனே:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் விக்கெட்டுகள் சரிந்தது. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.

    ரென்ஷா 68 ரன்னிலும் கேப்டன் சுமித் 27 ரன்னிலும், ஷான் மார்ஷ் 16 ரன்னிலும் ஹேன்ட்ஸ்கோம்ப் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 47 பந்தில் அரை சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்து இருந்தது.

    மிட்செல் ஸ்டார்க் 57 ரன்னுடனும், ஹேசல்வுட் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க், ஹேசல்வுட் தொடர்ந்து விளையாடினர்.

    இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் அஸ்வின் ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 63 பந்துகளில் 61 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும். இதனால்,    ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
    Next Story
    ×