search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு தடைவிதித்தது ஜெர்மன் கால்பந்து பெடரேஷன்
    X

    88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு தடைவிதித்தது ஜெர்மன் கால்பந்து பெடரேஷன்

    கால்பந்து மைதானத்தில் கலவரத்தை ஏற்படுத்த இருந்த 88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் தடை விதித்துள்ளது.
    இங்கிலாந்தில் பிரிமீயர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்சில் லீக் -1 கால்பந்து தொடர் நடைபெறுவது போல் ஜெர்மனியில் பண்டேஸ்லிகா தொடர் நடைபெற்று வருகிறது.

    கடந்த சனிக்கிழமை பொருஷியா டோர்ட்மண்ட் - டார்ம்ஸ்டாட் அணிகள் மோதின. இந்த போட்டியைக் காண இரண்டு பேருந்துகளில் பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வந்தனர். அப்போது போலீசார் அந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். ரசிகர்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் பொருட்கள், போரின்போது பயன்படுத்தப்படும் கையுறைகள், வலிநிவாரண மருந்து மற்றும் டார்ம்ஸ்டாட் அணியின் பேனர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனால் ஜெர்மன் பெடரேஷனின் பாதுகாப்பு தலைவர் ஹென்ரிக் கிராஸ், பொருஷியா டோர்மண்ட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த குறிப்பிட்ட வாகனங்களில் வந்த 88 ரசிகர்களுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 88 ரசிகர்களும் ஜெர்மனியில் நடைபெறும் போட்டிகளை மைதானத்தில் வந்து பார்க்க இயலாது.

    ஏற்கனவே பொருஷியா டோர்ட்மண்ட் அணி, ரசிகர்கள் மைதானத்தில் தொல்லை கொடுத்ததாக 1 லட்சம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×