search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக டக்: 24 முறை அவுட்டாகி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மர் முதலிடம்
    X

    அதிக டக்: 24 முறை அவுட்டாகி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மர் முதலிடம்

    24 முறை டக்அவுட் முறையில் வெளியேறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், அதிக டக் அவுட் ஆன வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் கிப்ஸ், தில்ஷன் 23 முறை அவுட்டாகியிருந்தனர்.
    26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல். அதிரடியாக விளையாடும் அவர் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக உமர் அக்மல் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற பெஷாவர் ஷல்மி அணிக்கெதிரான போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனார்.

    இந்த அவுட் மூலம் உமர் அக்மல் 24-வது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதல் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணியின் கிப்ஸ், இலங்கையின் தில்ஷன், வெஸ்ட் இண்டீசின் ஸ்மித் ஆகியோர் 23 முறை டக்அவுட் ஆகி இந்த மோசமான சாதனையில் முன்னிலையில் இருந்தனர். தற்போது உமர் அக்மல் அவர்களை மிஞ்சியுள்ளார்.

    இந்திய அணியின் கவுதம் காம்பீர் 18 முறை டக்அவுட் ஆகியுள்ளார். ஹர்பஜன் சிங் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார். நியூசிலாந்து அணியின் ஜீத்தன் பட்டேல் 68 இன்னிங்சில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார். இவர் சராசரியாக நான்கு போட்டியில் ஒன்றில் டக்அவுட் ஆகியுள்ளார்.
    Next Story
    ×