search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில், ரோஞ்சி சேர்ப்பு
    X

    தென்ஆப்பிரிக்கா தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில், ரோஞ்சி சேர்ப்பு

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட கப்தில், ரோஞ்சி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    முதல் டி20 மற்றும் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட கப்தில் மற்றும் ரோஞ்சி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மோசமாக விளையாடிய கொலின் முன்றோ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டன்). 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. டாம் ப்ரூஸ், 5. பெர்குசன், 6. கொலின் டி கிராண்டோம், 7. மார்ட்டின் கப்தில், 8. மேட் ஹென்றி, 9. டாம் லாதம், 10. ஜேம்ஸ் நீசம், 11. லூக் ரோஞ்சி, 12. மிட்செல் சான்ட்னெர், 13. டிம் சவுத்தி, 14. இஷ் சோதி, 15. ராஸ் டெய்லர்.

    முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. ட்ரென்ட் போல்ட், 3. நீல் ப்ரூம், 4. பெர்குசன், 5. கொலின் டி கிராண்டோம், 6. மார்ட்டின் கப்தில், 7. மேட் ஹென்றி, 8. டாம் லாதம், 9. ஜேம்ஸ் நீசம், 10. லூக் ரோஞ்சி, 11. மிட்செல் சான்ட்னெர், 12. டிம் சவுத்தி, 13. இஷ் சோதி, 14. ராஸ் டெய்லர்.
    Next Story
    ×