என் மலர்
செய்திகள்

ஐ.பி.எல். ஏலத்தில் 5 ஆப்கானிஸ்தான் வீரர்கள்
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
பெங்களூர்:
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந்தேதி முதல் மே 21-ந் தேதிவரை நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். ஏலத்தில் 750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 8 அணிகளிலும் சேர்த்து மொத்தம் 79 வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள்.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். முகமது சஷாத், முகமது நபி, ரஷீத்கான், தவ்லத் சர்தான், நஜீப்சர்தான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இதில் விக்கெட் கீப்பரான முகமது சஷாத் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அவர் 20 ஓவர் உலக கோப்பையில் 222 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 19 பந்தில் 44 ரன் எடுத்தார். இதனால் அவர் ஏலத்தில் விலை போவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றன. இதேபோல் இடது கை வேகப்பந்து வீரரான தவ்லத் சர்தானும் ஏலத்தில் விலை போவார் என்று கருதப்படுகிறது.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் ஸ்டோக்ஸ், மார்கன், வோக்ஸ், இஷாந்த் சர்மா, குட்மின்ங் மேத்யூஸ், மிச்சேல் ஜான்சன் போன்ற வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேர்ஸ்டோவ், போல்ட், ஹாடின், நாதன் லதன், அபோட், ஹோல்டா, போன்ற வீரர்களுக்கு ரூ.1½ கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story