search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கேப்டன் பதவியில் சாதித்த குக்
    X

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கேப்டன் பதவியில் சாதித்த குக்

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்த அலைஸ்டர் குக் கேப்டன் பதவியில் சாதித்த பட்டியல் குறித்து விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் அலஸ்டர் குக் பதவி விலகினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த பிறகு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அணியில் ஒரு வீரராக விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார்.

    32 வயதான குக் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 59 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 24-ல் வெற்றி பெற்று கொடுத்தார். 22-ல் தோல்வி ஏற்பட்டது. 13 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    2013 மற்றும் 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று முத்திரை பதித்தார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தார்.

    இங்கிலாந்து அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்தார் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்தப்படியாக மைக் ஆதாடன் 54 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதிக வெற்றி பெற்றவர்களில் ஸ்டாரசுடன் இணைந்து 2-வது இடத்தில் உள்ளார். வாகன் தலைமையில் அதிகமான 26 வெற்றி கிடைத்தது.

    குக் 2010 முதல் 2014 வரை ஒருநாள் கேப்டனாக பணியாற்றினார். இதில் 69 போட்டியில் 36-ல் வெற்றி கிடைத்தது. 30 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 2 போட்டி முடிவு இல்லை.

    இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஜோரூட் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
    Next Story
    ×